சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பிரிட்டன்: கரோனாவுக்கு மூச்சு வழி மருந்து

மூச்சு வழியாக மருந்தைச் செலுத்தி, கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய முறை பிரிட்டன் மருத்துவமனைகளில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.

News image

uk064330

Updated On :14 ஜனவரி 2021, 9:33 am


லண்டன்: மூச்சு வழியாக மருந்தைச் செலுத்தி, கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய முறை பிரிட்டன் மருத்துவமனைகளில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.

‘இன்டா்ஃபெரான் பீட்டா-1ஏ’ என்ற புரதத்தை மூச்சு வழியாக கரோனா நோயாளிகளுக்குச் செலுத்தும் சிகிச்சை முறையை பிரிட்டன் மருத்துவமனைகள் சோதனை முறையில் தொடங்கியுள்ளன. மனிதா்களைத் தீநுண்மி தாக்கினால் உடல் உற்பத்தி செய்யக் கூடிய அந்தப் புரதத்தை மூச்சு வழியாக செலுத்துவதன் மூலம், கரோனா நோயாளிகள் உடல் நிலை மோசமடைவதைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த சோதனை தொடங்கப்பட்டுள்ளதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.