மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ எஸ்.கதிரவனே மீண்டும் களம்காணும் நிலையில், திமுகவுக்கான செல்வாக்கு இங்கு அதிகரித்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுகவின் வசம் இருந்த மண்ணச்சநல்லூரை திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தன்வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உதயமான மண்ணச்சநல்லூர்
தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது புதிதாக உருவாக்கப்பட்டது இந்தத் தொகுதி.
2011 & 2016: அதிமுக வெற்றி பெற்றது.
2021: திமுக சார்பில் கதிரவன் களம் இறக்கப்பட்டார்.
வெற்றி விவரம்: கதிரவன் 59.46% வாக்குகளைப் பெற்றார். அதிமுக வேட்பாளர் பரஞ்சோதியை 59,618 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். (அதிமுக பெற்ற மொத்த வாக்குகளே 56,716 தான் என்பது கவனிக்கத்தக்கது).
திமுக வசமானது எப்படி பத்தாண்டுகால அதிமுகவின் கோட்டையை கதிரவன் தகர்த்தது குறித்து தொகுதிவாசிகள் கூறுவது:

"2011, 2016 தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை. அந்த அதிருப்தி ஒருபுறம் இருக்க, தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் துணைத்தலைவர் எஸ்.கதிரவன் செய்த கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன."
திருச்சியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம். பொறியியல் பட்டதாரியான எஸ்.கதிரவன், தனது கல்விக் குழுமத்தின் மூலம் திருச்சி மட்டுமல்லாது பெரம்பலூர் உள்ளிட்ட அருகாமை மாவட்டங்களுக்கும் ஏராளமான கல்விப்பணி, மருத்துவஉதவி போன்றவற்றையும் செய்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வென்ற கதிரவனே, மீண்டும் களம் இறங்குவதால் இங்கே திமுக கவனம் பெற்றுள்ளது.”என்றனர்.
சொன்னதைச் செய்தவர் கதிரவன்!
மணச்சநல்லூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுந்தரம் கூறியதாவது,
“மண்ணச்சநல்லூரில் உள்ள பெண்கள் அரசு பள்ளியில் எனது மகள் பயில்கிறார். அந்தப் பள்ளிக்கூடத்திற்கு 11.50 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் கணினி ஆய்வுகூடம் எம்.எல்.ஏ நிதியில் இருந்து அமைத்துக் கொடுத்துள்ளார். இதன் மூலம் எங்களைப் போன்ற விளிம்பு நிலையினர் வீட்டுக்குழந்தைகளும் கூட இந்த வசதிகளைப் பயன்படுத்தி, கற்றலில் கூடுதல் அக்கறை காட்டுகின்றனர்.
இதே போல் தனலட்சுமி குழும கல்லூரிகளில் நடைபெறும் மெரிட் அசெஸ்மெண்ட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இலவசக்கல்வி வசதியும் எஸ்.கதிரவன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதன் மூலம் ஏழ்மை நிலையில் இருப்போருக்கும், கட்டணமின்றி நல்ல கல்லூரியில் சேர்க்கை சாத்தியமாகிறது.

கதிரவனின் செயல்பாடுகள் குறித்து தொகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டவை:
கல்விப் பணி: பெண்கள் அரசுப் பள்ளிக்கு ₹11.50 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் கணினி ஆய்வகம் அமைத்துக் கொடுத்தார்.
இலவசக் கல்வி: மெரிட் அசெஸ்மெண்ட் தேர்வில் தேர்ச்சிப் பெறும் ஏழை மாணவர்களுக்குத் தனது கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்குகிறார்.
நிவாரணப் பணிகள்: கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியதுடன், தனது மருத்துவமனையில் குறைந்தக் கட்டணத்தில் இதய அறுவை சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
சுற்றுச்சூழல் முன்னெடுப்புகள்
சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்ட கதிரவன், தனது சொந்த நிதியில் செய்த பணிகள்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 40 ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு நீர்நிலைகளைத் தூர்வாரினார்.
துறையூர்-பெரம்பலூர் சாலையில் 25,000 மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறார்.
ஏழை மக்கள் வீடு கட்டிக்கொள்ள தலா 2 சென்ட் நிலம் வழங்கியிருக்கின்றார்.
கதிரவன் கொடுக்கும் 22 வாக்குறுதிகள்
மீண்டும் இரண்டாவது முறையாக களம் காணும் கதிரவன், தொகுதி மேம்பாட்டிற்காக முன்வைக்கும் முக்கிய வாக்குறுதிகள்:
அரிசி ஆலைகளுக்கு மும்முனை மின்சாரம்.
அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள்.
தொகுதிக்குள் அரசு கலைக் கல்லூரி.
மண்ணச்சநல்லூர் பாதாள சாக்கடைத் திட்டம்.
சமயபுரம் கோயிலுக்குச் செல்வோருக்குத் தனி நடைபாதை.
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள்.
திமுக அரசின் சாதனைகளும் கதிரவனும்
சட்டமன்ற உறுப்பினராகத் தனது தொகுதிக்குள் பல்வேறு துறைகளின் மூலம் ₹1119.27 கோடி மதிப்பீட்டில் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். இத்துடன் தமிழக அரசின்:
மகளிர் உரிமைத் தொகை
விடியல் பயணம் (இலவசப் பேருந்து)
புதுமைப் பெண் & தமிழ்ப் புதல்வன் திட்டம்
நான் முதல்வன் திட்டம்
போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் வேரூன்றி இருப்பதால், மண்ணச்சநல்லூரில் திமுகவுக்குச் சாதகமான அலை வீசுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
பொறுப்புத் துறப்பு : இது ஒரு விளம்பர தகவல். நிபந்தனைகள் பொருந்தும்.
தொடர்புடையது

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்

test
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


