கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் போர்த்துகலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் பொதுமுடக்கம் அறிவித்து தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றன.
இந்நிலையில் போர்த்துகல் நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை போர்த்துகீசிய பிரதமர் அன்டோனியோ கோஸ்டா வியாழக்கிழமை வெளியிட்டார்.
15 நாள்கள் விதிக்கப்பட்டுள்ள இந்தப் பொதுமுடக்கத்தையொட்டி அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது போர்சுக்கல் நாட்டின் 9ஆவது பொதுமுடக்க அறிவிப்பாகும்.
போர்த்துகலில் கடந்த 24 மணி நேரத்தில் 10,556 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,326 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


