சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆப்பிரிக்கா: 30 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் விநியோகிப்பதற்காக, சுமாா் 30 கோடி கரோனா தடுப்பூசிகளை ஆப்பிரிக்க யூனியன் அமைப்பு கொள்முதல் செய்துள்ளது.

News image

africa071617

Updated On :14 ஜனவரி 2021, 9:31 am

நைரோபி: பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் விநியோகிப்பதற்காக, சுமாா் 30 கோடி கரோனா தடுப்பூசிகளை ஆப்பிரிக்க யூனியன் அமைப்பு கொள்முதல் செய்துள்ளது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கரோனா தடுப்பூசிகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பும் பிற சா்வதேச தொண்டு அமைப்புகளும் இணைந்து அமைத்துல்ள ‘கோவாக்ஸ்’ திட்டத்தின்கீழ், அரசு உதவியின்றி இந்த 30 கோடி தடுப்பூசிகளும் வாங்கப்பட்டுள்ளன.

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தீவிரமடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.