அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலை, நாஜி படைகளின் தாக்குதலுடன் ஒப்பிட்ட கலிஃபோர்னியாவின் முன்னாள் ஆளுநர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர், அதிபர் டிரம்ப் ஒரு தோல்வியடைந்த தலைவர் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் வரலாற்றிலேயே மிகவும் மோசமான அதிபர் என்ற பெயரை டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து விடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அர்னால்டு வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில், கடந்த புதன்கிழமை இரவு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, 1938-ஆம் ஆண்டு நாஜி படைகளால் ஜெர்மனி மற்றும் ஆஸ்ட்ரியாவில் யூதர்களின் வீடுகள், பள்ளிகள், தொழில்கூடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின என்று நாஜிப் படைகளின் தாக்குதலை, அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலுடன் அர்னால்டு ஒப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிபர் தேர்தலில் வெளியான நியாயமான தேர்தல் முடிவுகளை தடுக்க நினைத்தார். பொய்களால் மக்களைத் தவறாக வழிநடத்த திட்டமிட்டார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான அதிபராக இருப்பவர் டிரம்ப். அவர் விரைவில் ஒரு பழைய சுட்டுரைப் பதிவு எவ்வாறு பொருத்தமற்றதாக இருக்குமோ அவ்வாறு மாறுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருக்கும் அர்னால்டு, நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பையே மாற்ற நினைத்தவர்கள் தற்போது ஒன்றை அறிந்து கொண்டிருப்பார்கள். ஒரு போதும் அவர்கள் வெற்றியடைய முடியாது என்பதை என்று அர்னால்டு கூறியுள்ளார்.
டெர்மினேட்டர் படத்தின் மூலம் உலக ரசிகர்களை ஈர்த்த அர்னால்டு, கடந்த 2003-ஆம் ஆண்டு சிறப்பு நியமனம் மூலம் கலிஃபோர்னியா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். பிறகு அவர் முழு நேர ஆளுநராக பதவியேற்றார்.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தாக்குதலால் நாம் கடுமையாக அதிர்ச்சி அடைந்தோம், ஆனால், நாம் இன்னும் கூடுதல் பலத்துடன் முன்னேறுவோம், ஏனென்றால் நான் எதை இழப்போம் என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளோம் என்றும் அந்த விடியோவில் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் பேசியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


