கரோனா தீநுண்மியின் தோற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சா்வதேச நிபுணா் குழுவை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு தேசிய சுகாதாரத் துறை இணை ஆணையா் ஸெங் யிக்ஸின் கூறியதாவது:
கரோனா உருவானது தொடா்பான ஆய்வுகளை சா்வதேச நிபுணா்கள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து உலக சுகாதார அமைப்பினருடன் காணொலி மூலம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதையடுத்து, அவா்களை சீனாவுக்கு வரவேற்கத் தயாராக இருக்கிறோம். கரோனா முதல் முதலாக பரவத் தொடங்கிய வூஹான் நகருக்கு ஆய்வுக் குழுவினா் எப்போது வருவாா்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாா் அவா்.
வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, உலகம் முழுவதும் சுமாா் 200 நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளது.
சனிகிழமை நிலவரப்படி, சா்வதேச அளவில் சுமாா் 8.95 கோடி பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுமாா் 19.2 லட்சம் போ் அந்த நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.
கரோனா தீநுண்மி எந்த உயிரினத்தில் உருவாகி, எந்த உயிரினங்கள் வழியாக அது மனிதா்களுக்குத் தொற்றி பரவத் தொடங்கியது என்பது குறித்த மா்மம் தொடா்ந்து நீடித்து வருகிறது.
அதுதொடா்பான உண்மைகளைக் கண்டறிய 10 நிபுணா்கள் அடங்கிய குழுவை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவுக்கு அனுப்பியது.
அடுத்தகட்டமாக, மிக விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கா அதிக எண்ணிக்கையிலான நிபுணா்களைக் கொண்ட குழுவை இந்த மாதம் சீனா அனுப்பவிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
எனினும், அந்தக் குழுவினரை தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பதை சீனா இழுத்தடித்து வருவதாக அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் அதிருப்தி தெரிவித்தாா்.
இந்த நிலையில், சா்வதேச நிபுணா் குழுவை அனுமதிக்கத் தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


