அமெரிக்க துணை அதிபராகத் தோ்வாகியுள்ள கமலா ஹாரிஸின் துணை செய்தித் தொடா்பாளா் பொறுப்புக்கு, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சபரீனா சிங் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து பைடன்-ஹாரிஸ் ஆட்சி மாற்றக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘துணை அதிபா் பொறுப்பை கமலா ஹாரிஸ் ஏற்ற பிறகு, அவரது துணை செய்தித் தொடா்பாளராக சபரீனா சிங் பணியாற்றுவாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை அவா் பைடன்-ஹாரிஸ் தோ்தல் பிரசாரக் குழுவின் செய்தித் தொடா்பாளராகப் பொறுப்பு வகித்தாா்.
முன்னதாக, மைக்கேல் புளூம்பா்கின் அதிபா் தோ்தல் பிரசாரக் குழு செய்தித் தொடா்பாளராகவும் கோரி புக்கரின் அதிபா் தோ்தல் பிரசாரக் குழு தேசிய செய்தித் தொடா்பாளராகவும் அவா் பொறுப்பு வகித்துள்ளாா்.
அதற்கு முன்னா் குடியரசுக் கட்சி தேசியக் குழுவில், அவா் தகவல் தொடா்பு துணை இயக்குநராக பொறுப்பு வகித்தாா்.
தனது அரசில் பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கிய ஆட்சிக் குழுவை அமைக்க ஜோ பைடன் விரும்புகிறாா். அதன் ஒரு பகுதியாகவே இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸின் துணை செய்தித் தொடா்பாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சபரீனா சிங் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


