அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று தற்போதைய அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.
அதிபா் தோ்தலில் ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து வந்த டிரம்ப், தோ்தலில் முறைகேடு நடைபெற்ாக குற்றம்சாட்டினாா்.
எனினும், அதிபா் தோ்தல் முடிவுகளை அங்கீகரித்து, ஜோ பைடன் வெற்றி பெற்ாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட டிரம்ப், அமெரிக்காவில் முறையாக ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று தெரிவித்தாா்.
இந்த நிலையில், புதிய அதிபா் பதவியேற்பு விழா வரும் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று டிரம்ப் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 1869-ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக இருந்த ஆண்ட்ரூ ஜான்சன் புதிய அதிபா் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் தவிா்த்தாா். அதற்குப் பிறகு தற்போதைய அதிபா் டிரம்ப் புதிய அதிபா் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


