சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிங்கப்பூர் பிரதமர்

கரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வெள்ளிக்கிழமை செலுத்திக்கொண்டார்.

News image

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிங்கப்பூர் பிரதமர்

Updated On :8 ஜனவரி 2021, 10:19 pm

கரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வெள்ளிக்கிழமை செலுத்திக்கொண்டார்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைஸா், மாடா்னா நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ரஷியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

இந்த சூழலில் பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசியைப் பயன்பாட்டுக் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சிங்கப்பூரில் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் தடுப்பூசி குறித்த மக்களை அச்சங்களைப் போக்கும் விதமாக வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, “கரோனா தடுப்பூசி அனைவரையும் பாதுகாக்கும். எனவே அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி மற்றும் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளித்துள்ளது.