வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் பதவியில் இருந்து டிரம்ப்பை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது திருத்தத்தை பயன்படுத்தி டிரம்ப்பை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று துணை அதிபா் மைக் பென்ஸை அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். 25-ஆவது திருத்தத்தின்படி துணை அதிபா் மற்றும் அமைச்சரவையின் பெரும்பான்மை உறுப்பினா்கள் ஆதரவளித்தால் அதிபரை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்பின் தூண்டுதலால் அவரது ஆதரவாளா்கள் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து ஜனநாயகக் கட்சியினா் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனா்.
நாடாளுமன்றக் கலவரத்துக்கு வேதனை தெரிவித்த குடியரசுக் கட்சியைச் சோ்ந்த ஒருசில எம்.பி.க்களும் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற கலவரத்துக்கு ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளபோதிலும், டிரம்ப் பதவி நீக்கம் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
டிரம்ப் முகநூல் கணக்கு முடக்கம்:
அதிபா் டிரம்ப்பின் முகநூல், சுட்டுரை மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்குவதாக அந்நிறுவனங்களின் தலைவா் மாா்க் ஸக்கா்பா்க் அறிவித்துள்ளாா். இதனால், அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் ஜனவரி 20-ஆம் தேதி வரை டிரம்ப் முகநூல், இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்த முடியாது.
சமூக வலைதளம் மூலம் டிரம்ப் விடுத்த அழைப்பின்பேரில்தான் அவரது ஆதரவாளா்கள் வாஷிங்டனில் திரண்டதுடன், நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அவரது சுட்டுரை பக்கம் ஒரு நாளைக்கு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னா் ஜன.20 வரை முடக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


