மனித செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கார்பனின் செறிவானது தொழில் புரட்சிக்கு முந்தைய அளவைக் காட்டிலும் 2021ஆம் ஆண்டில் 50 சதவீதம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தமானது காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காலநிலை மாற்றத்தைத் தவிர்க்க நிலக்கரி, எண்ணெய் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கு மாற்றான எரிபொருள்களை பயன்படுத்த விஞ்ஞானிகள் பரிந்துரைத்து வருகின்றனர்.
மனித செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவானது அதிகரித்து வருகிறது. வளிமண்டலத்தில் கார்பனின் செறிவானது 25% சதவீதம் அதிகரிக்க 200 ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில் தற்போது 50% அதிகரிப்பானது வெறும் 30 ஆண்டுகளுக்குள்ளாக நடந்துள்ளதாக இங்கிலாந்து வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு மற்றும் காடழிப்பு ஆகியவற்றின் காரணமாக 2021ஆம் ஆண்டில் கார்பனின் செறிவு மேலும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழில்துறை புரட்சியின் தொடக்கத்தில் இருந்த 278 பிபிஎம் கார்பனின் செறிவானது 2021ஆம் ஆண்டில் 50% அதிகரித்து 417 பிபிஎம்-ஆக இருக்கும் என்று ஆய்வு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கார்பன் செறிவின் ஆண்டு சராசரியானது 416.3 பிபிஎம் அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


