அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை சம்பவத்தைக் குரிப்பிட்டு மேற்கத்திய ஜனநாயகம் நிலையற்றது என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்று வந்தது.
அப்போது அமெரிக்க அதிபரின் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முறியடிக்கும் முயற்சியாக, புதன்கிழமை காலை டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியாகினர்.
இதற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி மேற்கத்திய ஜனநாயகம் நிலையற்றது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “அமெரிக்காவில் நடந்தது மேற்கத்திய ஜனநாயகத்தின் தோல்வியைக் காட்டுகிறது. டிரம்ப் தனது நாட்டின் நற்பெயரை கெடுத்துள்ளார்” என்று ரூஹானி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக ஈரான் அதிபர் ரூஹானி முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


