வன்முறையைத் தூண்டுதல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து தவறான தகவலை தொடர்ச்சியாகப் பரப்பியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் சமூக வலைத்தள கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை அடுத்து ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்று வந்தது.
அப்போது அமெரிக்க அதிபரின் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முறியடிக்கும் முயற்சியாக, புதன்கிழமை காலை டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியாகினர்.
இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை சம்பவத்தை தூண்டியது மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக டிரம்பின் முகநூல், சுட்டுரை மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
உள்ளடக்க விதிகளை மீறியதற்காக எச்சரிக்கப்பட்ட டிரம்ப் தொடர்ச்சியாக அதே செயலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்கள் தெரிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து சுட்டுரை நிறுவனம் அவரது 3 பதிவுகளை நீக்கியதுடன் அவரது பக்கத்தை 12 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளது.
அதேபோல் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களும் அவரது பக்கத்தை 24 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளன. அதேபோல் யூடியூப் நிறுவனம் உள்ளடக்க விதிகளை மீறியதாக டிரம்பின் காணொலிகளை நீக்கியுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


