அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டு அவரது வெற்றி நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் வருகிற ஜனவரி 20 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்காக இன்று நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, புதன்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தை டிரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில். இந்த வன்முறை மற்றும் கலவரத்தில் பெண் உள்பட நான்கு பேர் பலியாகினர். காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்தனர். 50க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே நாடாளுமன்ற செனட் அவையில், ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், இந்த எதிர்ப்புகளை செனட் அவை நிராகரித்தது. துணை அதிபர் மைக் பென்சும், டிரம்ப்பின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வன்முறை மூலம் ஒருபோதும் தீர்வினை பெற முடியாது என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றதையடுத்து, பைடனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை பெற்றது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


