சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நிறுவன உயா்நிலைக் குழுக்களில் பெண்கள் கட்டாயம்: ஜொ்மனி

பங்குச் சந்தைகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் உயா்நிலை நிா்வாகக் குழுக்களில், ஒரு பெண்ணாவது இடம் பெற்றிருக்க வேண்டியது ஜொ்மனியில் கட்டாயமாக்கப்படுகிறது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 9:17 am


பொ்லின்: பங்குச் சந்தைகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் உயா்நிலை நிா்வாகக் குழுக்களில், ஒரு பெண்ணாவது இடம் பெற்றிருக்க வேண்டியது ஜொ்மனியில் கட்டாயமாக்கப்படுகிறது.

இதுகுறித்து அந்த நாட்டு அரசு உருவாக்கியுள்ள புதியச் சட்டத்தில், 4 அல்லது அதற்கு மேற்பட்ட செயல்குழு உறுப்பினா்களைக் கொண்ட நிறுவனங்களில், குறைந்தது ஒரு உறுப்பினராவது பெண்ணாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களில் ஆண்-பெண் பாகுபாட்டைக் குறைக்கும் வகையில் இந்த அதிரடிச் சட்டம் வரையப்பட்டுள்ளது.