கரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சீனா செல்ல இருந்த உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழுவுக்கு சீன அரசு அனுமதியளிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய கரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவில் கரோனா தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கொண்ட ஆய்வுக் குழு தயாராகி வந்தது. எனினும் சீன அரசின் அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரோனா ஆய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவு அமைசர் மரைஸ் பெய்ன் கரோனா தோற்றம் குறித்து ஆராயும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழுவுக்கு தாமதமின்றி சீனா அனுமதியளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


