நார்வே நாட்டின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
தெற்கு நார்வேயின் ஜெஜெர்ட்ரம் நகரத்தில் கடந்த புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள 12க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் வரை பலியாகியும், 10 பேர் காயமடைந்தும் உள்ளனர். இதுவரை 11 பேர் வரை நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். ஒரு வாரத்தைக் கடந்து நடந்து வரும் மீட்புப் பணிகளின் மத்தியில் “நிலச்சரிவில் சிக்கிய மக்களை உயிருடன் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. இதனால் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது” என்று மாகாண காவல்துறைத் தலைவர் ஐடா மெல்போ ஓயஸ்டீஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான அடுத்த கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


