சீனாவின் இணைய விற்பனைதளமான அலிபாபா நிறுவனம் தனது இசை ஒலிபரப்பு தளமான சியாமி மியூசிக்கை மூடுவதாக அறிவித்துள்ளது.
சீனத்தைச் சேர்ந்த முன்னணி இணைய வர்த்தக நிறுவனமாக அறியப்பட்டு வருகிறது அலிபாபா. சீனத்தில் தனது வெற்றிக்கொடியை நிலைநாட்டிய அலிபாபா நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் தனது கிளையைப் பரப்பி வருகிறது.
இந்த நிலையில், சீன அரசுக்கும் ஜாக் மாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. அலிபாபா நிறுவன வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், சில கோட்பாடுகளை சீன அரசு வகுப்பதாகவும் பழமைவாதத்தை சீன அரசு கைவிட வேண்டும் என்றும் ஜாக் மா கடந்த அக்டோபர் மாதம் வெளிப்படையாகவே விமரிசித்திருந்தார்.
இந்த விமரிசனத்தைத் தொடர்ந்து சீன அரசின் பல்வேறு தொல்லைகளுக்கு அலிபாபா நிறுவனமும், ஜாக் மாவும் ஆளானதாகக் கூறப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து அலிபாபா நிறுவனத்தின் இசை ஒலிபரப்புதளமான சியாமி மியூசிக் செயல்திறன் மாற்றங்கள் காரணமாக தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சியாமிக் மியூசிக் தளத்தை 2013ஆம் ஆண்டில் அலிபாபா நிறுவனம் வாங்கியது.
பயனர்களின் பன்முகப்படுத்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ள சியாமி பிப்ரவரி 5ஆம் தேதி தனது சேவையை நிறுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
சியாமி மியூசிக் தளம் மூடப்பட்டதற்கு அரசியல் அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


