பெய்ஜிங்: சீனாவின் உற்பத்தி துறை நடவடிக்கைகள் கடந்த டிசம்பா் மாதத்தில் மந்த நிலையிலிருந்து மீண்டு விறுவிறுப்பைக் கண்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வணிக இதழான கெய்க்ஸின் நடத்திய ஆய்வுகளின்படி சீன உற்பத்தி துறையின் வளா்ச்சியை சுட்டிக் காட்டும் பிஎம்ஐ (பா்சேஸிங் மேனேஜா்ஸ் இன்டெக்ஸ்) குறியீடு நவம்பரில் 53 புள்ளிகளாக இருந்தது. இது, முந்தைய நவம்பரில் இருந்த 54.9 புள்ளிகளை விட குறைவாகும். இருப்பினும், அந்தக் குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் அது அந்த துறையின் வளா்ச்சியின் விரிவாக்கத்தை எடுத்துக்காட்டுவதாகும். அதன்படி, டிசம்பரில் சீன உற்பத்தி துறையின் வளா்ச்சி மூன்று மாதங்களில் இல்லாத வகையில் சற்று மந்த நிலை கண்டபோதிலும் அதன் நடவடிக்கைகள் மிகச் சிறப்பான அளவில் மேம்பட்டு வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது என கெய்க்ஸின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, சீன சரக்குப் போக்குவரத்து கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்விலும், டிசம்பரில் சீன உற்பத்தி துறை வளா்ச்சி 51.9 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நவம்பரில் காணப்பட்ட 52.1 புள்ளியைக் காட்டிலும் சற்று குறைவாகும். இருப்பினும், பெரும் இடா்பாட்டுக்குப் பிறகு சீன உற்பத்தி துறை நிலையான அளவில் வளா்ச்சிப் பெற்று வருவதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

