கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியதற்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவேக்ஸின்' மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்று (ஜன. 3) அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அவசர கால பயன்பாட்டிற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே மத்திய அரசின் இந்த முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. அவசர பயன்பாட்டிற்காக கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதியளிப்பது வரவேற்கத்தக்கது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


