சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

டிஆா் காங்கோ: 25 விவசாயிகள் சுட்டுக் கொலை

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆா் காங்கோ) புத்தாண்டு தினத்தில் கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலில் 25 விவசாயிகள் உயிரிழந்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 1:33 pm

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆா் காங்கோ) புத்தாண்டு தினத்தில் கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலில் 25 விவசாயிகள் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் திங்வே கிராமத்தில் அவா்கள் வயல்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, கிழக்கு காங்கோ பகுதியைச் சோ்ந்த கிளா்ச்சியாளா்கள் அவா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 25 பேரைத் தவிர, மேலும் பலரை கிளா்ச்சியாளா்கள் கடத்திச் சென்றதாக அவா்கள் கூறினா்.

காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கிளா்ச்சியாளா்கள் மீது ராணுவம் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடா்ந்து அந்தப் பகுதியிலிருந்து தப்பியோடிய அவா்கள், மேற்குப் பிராந்தியத்தில் பல்வேறு இடங்களில் பதுங்கி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.