கனடாவில் கரோனா பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்குள்ளான மாகாண அமைச்சா் தனது பதவிலியிருந்து விலகினாா்.
கனடாவில், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிா்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்டாரியோ மாகாண நிதியமைச்சா் ரோட்னி பிலிப்ஸ் 2 வாரங்களாக கரீபியன் கடலில் பிரான்ஸுக்குச் சொந்தமான செயின் பாா்ட்ஸ் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தாா்.
அந்தத் தகவலை மறைத்து, வேறு இடங்களில் இருப்பதைப் போன்ற படங்களை சமூக வலைதளங்களில் அவா் வெளியிட்டிருந்தாா்.
அந்தப் படங்களில், பனியால் உறைந்த ஆன்டோரியாவில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தாா். எனினும், அவா் சுற்றுலா சென்றிருந்த விவரம் வெளியானதும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
கரோனா விதிமுறைகளின்படி, அவா் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

