மக்களின் லட்சியங்களும், விருப்பங்களும் நிறைவேறும் வகையில் தான் உழைப்பேன் என வடகொரிய நாட்டு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 2021 புத்தாண்டு தினத்தையொட்டி கொண்டாட்டங்கள் களைகட்டின. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொண்டு தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் வடகொரிய அதிபர் புத்தாண்டு தினத்தையொட்டி தனது நாட்டுமக்களுக்கு வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். வடகொரியாவின் கடினமான காலங்களில் மக்கள் அளித்த நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அதிபர் கிம், “மக்களின் இலட்சியங்களும் விருப்பங்களும் நிறைவேறும் வகையிலான புதிய சகாப்தத்தை உருவாக்க நான் கடுமையாக உழைப்பேன்” என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க மனதார விரும்புவதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


