நீண்ட போராட்டத்திற்குப் பின் பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் சூழலில் கருக்கலைப்பு மேற்கொள்வதற்கான சட்டப்பூர்வ அனுமதியை ஆர்ஜென்டினா அரசு வழங்கியுள்ளது.
லத்தீன் அமெரிக்கா, டொமினிகன் குடியரசு மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் கருக்கலைப்புகளை மேற்கொள்ள தடை இருந்து வருகிறது. கருக்கலைப்புகளை மேற்கொள்வது சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்ட நிலையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறை தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன.
கருக்கலைப்பிற்கு சட்டப்பூர்வ அனுமதி கோரி பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை கருக்கலைப்பிற்கு சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் மசோதாவிற்கு ஆர்ஜென்டினா அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து நாடாளுமன்றத்தின் முன் கூடிய கருக்கலைப்பு ஆதரவாளர்கள் பச்சை வண்ணக் கைக்குட்டைகளுடன் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
அம்னஸ்டி இன்டர்நேஷனல் அர்ஜென்டினாவின் நிர்வாக இயக்குநரும், உலகளாவிய பெண்கள் உரிமை இயக்கத்தின் தூதருமான மரியெலா பெல்ஸ்கி, “ஆர்ஜென்டினா பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
ஆர்ஜென்டினா பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கருக்கலைப்புகளுக்கு மட்டுமே தற்போது அனுமதியளித்துள்ளது. அதன்படி மற்ற அனைத்து சூழ்நிலைகளிலும், கருக்கலைப்பு சட்டவிரோதமானதாகக் கருதப்பட்டு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


