பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மனைவி சமந்தா கேமரூனின் நடத்திவரும் சில்வர் ஸ்டார் அறக்கட்டளை, பிரதமர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
உலகப் புகழ்பெற்ற, 10, டவுனிங் தெரு என்ற முகவரியிலுள்ள மாளிகையான இது, 275 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டன் பிரதமர்களின் இல்லமாக இருந்து வரும் சிறப்பைப் பெற்றது.
நீரிழிவு நோய்க்கு எதிராகப் போராடிவரும் சில்வர் ஸ்டார், ஆறு ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த அறக்கட்டளைக்கு அமிதாப் நீண்ட காலமாகவே உதவி செய்து வருகிறார். அதன் காரணமாக, கடந்த வருடம் அவரது 70-ஆவது பிறந்த நாளன்று "அமிதாப்' என்று பெயரிடப்பட்ட நடமாடும் நீரிழிவு மையத்தை இந்த அறக்கட்டளை பரிசளித்தது. ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு இலவசமாக நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்வதுடன், உணவுக் கட்டுப்பாடு, வாழ்வியல் முறைகள் பற்றிய ஆலோசனைகளையும் இம்மையம் அளித்து வருகிறது.
இது போல நான்கு நடமாடும் நீரிழிவு மையங்களை நடத்தி வரும் இந்த அறக்கட்டளை, பிரிட்டனிலும், இந்தியாவிலும் இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நீரிழிவுப் பரிசோதனை செய்துள்ளது.
பிரதமர் டேவிட் கேமரூன் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுடன் அமிதாப் பச்சன்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


