நியூயார்க்கில் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ள 68ஆவது ஐ.நா. சபைக் கூட்டத்தை புறக்கணிக்க வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா முடிவு செய்துள்ளார்.
வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் நெருக்கடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யத் தவறியமை உள்ளிட்ட காரணங்களால் ஷேக் ஹசீனா இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆளும் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, தேர்தல் காரணமாக வங்க தேசத்தில் நிலவி வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாகவும், நாடாளுமன்றக் கூட்டம் தொடங்க இருப்பதாலும் ஹசீனா ஐ.நா. சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யாத காரணத்தாலேயே ஹசீனா, ஐ.நா. சபை கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாக வங்கதேச வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
68-வது ஐ.நா. சபை கூட்டத்திற்கு ஹசீனா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ""வங்கதேசப் பிரதமர் ஹசீனா, எதிர்க்கட்சித் தலைவர் கலீதா ஜியா இருவரும் அரசியல் நெருக்கடியைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.
நோபல் பரிசு வென்ற முகமது யூனஸிடம் வங்கதேச அரசு கடுமையாக நடந்து கொண்டது, அந்நாட்டு அரசின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்க அரசு, வங்கதேச அரசு மீது அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக ஹசீனா செப்டம்பர் 23ஆம் தேதி நியூயார்க் சென்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்துப் பேச முடிவு செய்திருந்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


