சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாகிஸ்தானில் குண்டு வெடித்து 9 ராணுவ வீரர்கள் சாவு

பாகிஸ்தானில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

Updated On :2 செப்டம்பர் 2013, 6:35 am

பாகிஸ்தானில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியான வஜிரிஸ்தானில் உள்ள தாடாகேலில் இருந்து மிராம்ஷா நோக்கி ராணுவ வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தன. போயா என்ற இடத்தில் அவை சென்றபோது அங்கு சாலையோரம் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 9 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, இந்த குண்டு வெடிப்பில் 3 வீரர்கள் இறந்ததாக ராணுவச் செய்திக்குறிப்பு தெரிவித்தது.

இப்பகுதியில் ராணுவ வாகனங்கள் பத்திரமாகச் செல்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், நாள்தோறும் மாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக, ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர்.