நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை ராணுவ உடையில் சென்று நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 24 பேர் உயிரிழந்தனர். 34 பேரைக் காணவில்லை.
நைஜீரியாவின் வடக்குப் பகுதியை முஸ்லிம் நாடாக மாற்றக் கோரி போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நைஜீரியாவின் போர்னோ மாகாணம் மோங்குனோ நகரில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ராணுவ உடையில் சென்று அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 24 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அண்மையில் நைஜீரிய அதிபர் குட்லக் ஜொனாதன், நாட்டின் வடபகுதியில் உள்ள 3 மாநிலங்களில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார்.
இதையடுத்து, அந்த மாநிலங்களில் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டு பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறும்போது, போகோ ஹராம் பயங்கரவாதிகளின் முகாம் மீது நாங்கள் நடத்திய தாக்குதலில் அதன் இயக்கத் தலைவர் அபு பக்கர் ஷேகா உயிரிழந்தார் என்று தெரிவித்தனர்.
எண்ணை வளம் மிகுந்த ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்பட 15 கோடி பேர் வசித்து வருகிறார்கள்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

