ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தத் தயார் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
நவநீதம் பிள்ளை சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், ""முல்லைத்தீவில் உள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு சமீபத்தில் நான் செல்வதற்கு முன்பும் பின்பும் ராணுவம் மற்றும் போலீஸார் சென்றதாக எனக்கு தகவல் வந்ததது'' என்றும் அவர் குறை கூறியிருந்தார்.
இந்நிலையில், நவநீதம் பிள்ளை எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தத் தயார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கேஹலிய ரம்புக்வெல்லா, கொழும்பில் செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
இந்த விசாரணையை நடத்த வேண்டுமானால், குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நவநீதம் பிள்ளையின் அலுவலகம் வழங்க வேண்டும். அவரிடம் பேசிய நபர்களை அச்சுறுத்துவதன் மூலம் அரசின் நற்பெயரைக் குலைக்க சில அமைப்புகள் முயற்சிக்கலாம். இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து, தாம் விரும்பும் யாரையும் சந்திக்க நவநீதம் பிள்ளைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது என்றார் கேஹலிய ரம்புக்வெல்லா.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


