சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இராக்கில் 44 ஈரானிய அகதிகளை ராணுவம் கொன்றதாக புகார்

ஈரானிலிருந்து நாடு கடத்தப்பட்ட அகதிகளுக்கான முகாம் ஒன்றில் 44 அகதிகளை ராணுவத்தினர் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Updated On :2 செப்டம்பர் 2013, 6:33 am

ஈரானிலிருந்து நாடு கடத்தப்பட்ட அகதிகளுக்கான முகாம் ஒன்றில் 44 அகதிகளை ராணுவத்தினர் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் இரண்டு ராணுவ வீரர்களை முகாம்வாசிகள் அடித்துக் கொன்றதாகவும், மூன்று வீரர்கள் காயமடைந்ததாகவும் ராணுவம் கூறியுள்ளது.

இராக்கின் தியாலா மாகாணத்தில், ஈரான் எல்லைக்கருகில் அமைந்துள்ள அஷ்ரப் முகாமில், ஈரானிலிருந்து நாடு கடத்தப்பட்ட சுமார் 100 பேர் தங்கியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஈரான் மக்கள் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இராக்கிய ராணுவ வீரர்கள் இந்த முகாமில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஐந்து ராக்கெட் குண்டுகள் வெடித்ததாகவும், ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் முகாமிலிருந்தவர்கள் 44 பேர் உயிரிழந்ததாகவும் ஈரான் மக்கள் முஜாஹிதீன் அமைப்பு குற்றம் சாட்டியது. முகாமுக்கு ராணுவத்தினர் தீ வைத்ததாகவும் அந்த அமைப்பு கூறியது.

ஆனால் மருத்துவர்களோ, ஐநா அமைப்போ இந்தத் தகவலை உறுதி செய்யவில்லை.

ராணுவத்தரப்பிலோ, முகாமில் வெடித்தது ராக்கெட் அல்ல, முகாமுக்குள் இருந்த எரிபொருள் கலன்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

""இதனால் கோபம் கொண்ட முகாம்வாசிகள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்'' என்று ராணுவ அதிகாரி அல்-ஷரிபி கூறினார்.

இந்த எண்ணிக்கையை மாகாணத் தலைநகர் பகுபாவிலுள்ள மருத்துவர் ஒருவர் உறுப்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே, இராக்கில் இதே போன்ற மற்றொரு முகாமில் நிகழ்ந்த ராக்கெட் குண்டுத் தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.