விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு அமெரிக்க ராணுவ, அரசுத்துறை ரகசியங்களைத் தெரிவித்த அந்நாட்டு ராணுவ வீரருக்கு 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே நடத்தி வரும் விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க ரகசிய நடவடிக்கைகள் பலவற்றை ஆதாரங்களுடன் சேகரித்து அவற்றை வெளிவுலகுக்கு அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த இணையதளத்துக்கு அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மேனிங் (25) பல்வேறு ரகசியத் தகவல் அளித்து குற்றம் புரிந்ததை நீதிமன்றம் கடந்த வாரம் உறுதி செய்தது. உளவுச் சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
அவருக்கு 60 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வேண்டுமென்று அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது. மேனிங் வெளியிட்டதாகக் கூறப்படும் சில ஆவணங்கள், பின்னர் அரசால் பகிரங்கப்படுத்தப்பட்டவைதான் எனவே அவருக்கு 25 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக் கூடாது என்று மேனிங் தரப்பில் வழக்குரைஞர் வாதிட்டார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

