சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இலங்கை மறுப்பு

இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ள 114 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்திய அரசு முன்வைத்த கோரிக்கையை அந்நாடு நிராகரித்து விட்டது.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 12:03 pm

இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ள 114 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்திய அரசு முன்வைத்த கோரிக்கையை அந்நாடு நிராகரித்து விட்டது.

தங்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக 114 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பல்வேறு கால கட்டங்களில் கைது செய்தது. அவர்கள் அந்நாட்டின் மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களை விடுதலை செய்யுமாறு இந்தியா சமீபத்தில் கோரிக்கை வைத்ததுடன், தூதரக ரீதியில் தனது ஆட்சேபத்தையும் தெரிவித்தது.

இதற்கான மனு கொழும்பிலும், தில்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்திடமும் வழங்கப்பட்டது. இதற்காக கரியவாசம், வெளியுறவு அமைச்சகத்துக்கு சம்மன் அனுப்பி அழைக்கப்பட்

டிருந்தார்.

அவரிடம் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்துக்கும் இந்தியாவின் ஆட்சேபத்தை வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்த்தன் ஷ்ருங்க்லா தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவின் ஆட்சேபத்தை இலங்கை நிராகரித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் கருணதிலகே அமுனுகாமா அளித்த பேட்டியில் கூறியது:

மீனவர்களை விடுவிக்கும் விவகாரத்தில், சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. சட்டம் அதன் கடமையைச் செய்யும். மீனவர்களை விடுதலை செய்வது என்ற தனது நிலைப்பாட்டை அரசு மாற்றிக் கொள்ளாது.

மாறாக, இந்திய மீனவர்களின் விடுதலையை துரிதப்படுத்த அட்டர்னி ஜெனரல் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றும்.

இலங்கையின் நிலைப்பாட்டை இந்திய அரசிடம் தெரிவிக்குமாறு எங்கள் தூதர் கரியவாசம் பணிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சர்வதேச கடல் எல்லையைக் கடக்க வேண்டாம் என்று தங்கள் மீனவர்களை அறிவுறுத்துமாறு, இந்திய அரசிடம் தெரிவிக்கும்படி அவர் பணிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் மனிதாபிமான முறையில் நடத்தப்படுகின்றனர். இந்தியத் தூதரக அதிகாரிகள் அவர்களைச் சந்திக்கவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனுமதி தரப்படுகிறது என்றார்

கருணதிலகே.