சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

லாட்டரி சீட்டு விற்ற இந்தியருக்கு ரூ.60 லட்சம் கமிஷன்

அமெரிக்காவில் மிகப்பெரிய பரிசுத் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாட்டரி சீட்டை விற்ற இந்தியருக்கு ரூ.60 லட்சம் கமிஷன் கிடைக்க இருக்கிறது.

Updated On :12 ஜூலை 2013, 6:28 am

அமெரிக்காவில் மிகப்பெரிய பரிசுத் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாட்டரி சீட்டை விற்ற இந்தியருக்கு ரூ.60 லட்சம் கமிஷன் கிடைக்க இருக்கிறது.

இந்தியரான கேரி படேல் (30) சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறினார். பென்சில்வேனியா மாகாணத்தில் மதுபான கடை வைத்திருக்கும் இவர் லாட்டரி சீட்டுகளையும் விற்பனை செய்து வருகிறார்.

பென்சில்வேனியா லாட்டரியில் ஒருவருக்கு ரூ.789 கோடி பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசுக்குரியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதற்கிடையே இந்த பரிசுத் தொகைக்கான லாட்டரி சீட்டை விற்றவருக்கு ரூ.60 லட்சம் கமிஷனாக வழங்கப்படும் எனத் தெரிகிறது.

பரிசுக்குரிய இந்த லாட்டரி சீட்டை (எண் 13-19-23-33-57) விற்றவர் படேல் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், பட்டேலின் கடைக்கு திடீரென சென்ற பென்சில்வேனியா லாட்டரி நிறுவன அதிகாரி கிம் மோர்ஃபியா இதை உறுதி செய்துள்ளார்.

""மெகா பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாட்டரி சீட்டை நீங்கள் விற்பனை செய்துள்ளீர்கள். அதற்காக வாழ்த்துகள்'' என படேலிடன் கிம் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட படேல் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். இந்த கமிஷன் தொகையை தனது கடை பணியாளர்கள் 3 பேருக்கு ஊக்கத் தொகையாக வழங்கப் போவதாக படேல் கூறியுள்ளார்.