சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 40 பேர் புதைந்துள்ளனர்.
பலத்த மழையின் காரணமாக புதன்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டதாக "ஸின்ஹுவா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் மற்றும் மோப்ப நாய்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மாகாணத்தில் திங்கள்கிழமை முதல் 3 பாலங்கள் இடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவர் இடிந்து 12 பேர் சாவு: சீனாவின் வடக்கு ஷான்சி மாகாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கட்டுமான தொழிலாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பாதிப்படைந்த சுவர், செவ்வாய்க்கிழமை இரவு இடிந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

