சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கம்ப்யூட்டர் ரூ. 2.32 கோடிக்கு ஏலம்

ஆப்பிள் நிறுவனம் தயார் செய்த முதல் கம்ப்யூட்டர், ரூ. 2.32 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

Updated On :12 ஜூலை 2013, 6:27 am

ஆப்பிள் நிறுவனம் தயார் செய்த முதல் கம்ப்யூட்டர், ரூ. 2.32 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் வோஸ்நியாக்கினால் 1976-ம் ஆண்டு ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட்டது.

இந்தக் கம்ப்யூட்டரின் "மதர்போர்டு' மரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. இதில் வோஸ்னியாக், தனது கையெழுத்திட்டிருந்தார்.

இக்கணினி, லண்டனில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல நிறுவனத்தின்மூலம் இணையத்தின் வழியாக ஏலம் விடப்பட்டது. இது, ரூ. 2.32 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர் குறித்த விவரம் தெரியவில்லை.

ஆப்பிள்-1 வடிவில் தயார் செய்யப்பட்ட முதல் 25 கம்ப்யூட்டரில் தற்போது ஏலத்தில் விடப்பட்ட கம்ப்யூட்டர் முதலாவதாக உருவாக்கப்பட்டதாகும். அதன் வரிசை எண் 01-0025.

ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை அடிப்படையாக வைத்து ஆப்பிள்-2 கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் கம்ப்யூட்டர் தயாரிப்பில் பெரும் புரட்சி ஏற்பட்டது. தற்போது சர்வதேச அளவிலான விற்பனையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் முன்னணி வகிக்கின்றன.