ஐரோப்பிய யூனியன் அமைப்பில் குரேஷியா புதிய உறுப்பினராக இணைந்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் அமைப்பில் 27 நாடுகள் இடம்பெற்றிருந்தன. அந்த அமைப்பில் இணைய குரேஷியா முயற்சியெடுத்து வந்தது. பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின் ஐரோப்பிய யூனியனில் குரேஷியா இணைய உறுப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்தன.
இதையடுத்து, அந்த அமைப்பில் குரேஷியா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அதிகாரபூர்வமாக இணைந்தது. அதையும் சேர்த்து ஐரோப்பிய யூனியனில் இப்போது 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஐரோப்பிய யூனியனில் இணைந்ததைக் கொண்டாடும் வகையில் குரேஷியாவின் தலைநகர் ஜாக்ரேபில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் விழா நடைபெற்றது.
இதில் 20 ஆயிரம் மக்கள் திரண்டிருந்து உற்சாகமாக கோஷங்களை எழுப்பினர். "ஐரோப்பிய யூனியனுக்கு வரும் குரேஷியாவுக்கு நல்வரவு' என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மேனுவல் பரோசோ தெரிவித்தார்.
விழாவில் ஐரோப்பிய யூனியனின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நகரெங்கும் வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டன.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். 700 பாடகர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டியக்காரர்கள் ஆகியோர் இணைந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
விழாவில் குரேஷியாவின் அதிபர் இவோ ஜோசிபோவிக் பேசுகையில், ""இந்த நாள் நமக்கு மிகப்பெரிய மற்றும் மகிழ்ச்சியான நாளாகும். இந்த நாளில், நமது வரலாற்றுப் புத்தகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தில் நாம் நுழைகிறோம்'' என்று தெரிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

