இலங்கையில் 13ஏ சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க நாடாளுமன்றத் தேர்வுக் குழு உறுப்பினர்களை அதிபர் மகிந்த ராஜபட்ச வெள்ளிக்கிழமை நியமித்தார்.
19 பேரை கொண்ட இக்குழுவின் தலைவராக மூத்த அமைச்சர் நிர்மல் ஸ்ரீபாலா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸýம் இக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் வரும் செப்டம்பரில் தேர்தல் நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாகாணங்களின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் அவசர சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அதிபர் ராஜபட்ச முடிவு செய்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்வுக் குழு:1987-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட 13ஏ சட்டப் பிரிவில் மாகாணங்களுக்கு போலீஸ் மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருந்தன.
இப்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அனைத்து கட்சிகளும் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று மகிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
இக்குழுவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். எனினும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இக்குழுவில் இடம்பெறவில்லை.
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவை அரசின் இந்நடவடிக்கை குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இக்கட்சிகளும், இலங்கை முஸ்லிம் காங்கிரசும் மாகாணங்களின் அதிகாரத்தைப் பறிக்க, ஆளும் கூட்டணி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

