விமான நிலைய கட்டுமானம், பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்த மாலத்தீவு அரசிடம் ரூ.7,700 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளது இந்திய கட்டுமான நிறுவனமான ஜிஎம்ஆர்.
இது தொடர்பான மனு, சிங்கப்பூர் நீதிமன்றத் தீர்ப்பாயத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட 25 ஆண்டுகால ஒப்பந்தத்தை தவறான முறையில் மாலத்தீவு அரசு ரத்து செய்துவிட்டதாகவும் ஜிஎம்ஆர் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை நம்பி தாங்கள் மேற்கொண்ட செலவுகள், பிற நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அதற்கு அளிக்க வேண்டிய நஷ்டஈடு என தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக சுமார் 75 பக்க அறிக்கையை நீதிமன்றத் தீர்ப்பாயத்தில் ஜிஎம்ஆர் தாக்கல் செய்துள்ளது.
மாலத்தீவு அதிபராக முகமது நஷீத் பதவி வகித்தபோது, மாலேயில் உள்ள சர்வதேச விமான நிலைய கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தை ஜிஎம்ஆர் பெற்றது. ஆனால் முகமது வாஹித் மாலத்தீவு அதிபரான பின் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

