பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வான்வெளியில் இந்திய ஜெட் போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதை இந்திய விமானப் படை மறுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:÷இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 2 ஜெட் போர் விமானங்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பாக்பத்தன் மாவட்டத்தில் உள்ள ஹெட்சுலேமான்கி என்ற இடம்வரை அத்துமீறி நுழைந்துள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 7 கி.மீ. வரை இந்திய விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. ஒரு நிமிடம் பாகிஸ்தான் பகுதியில் பறந்த அந்த இரு விமானங்களும், பின்னர் இந்தியப் பகுதிக்கு திரும்பிச் சென்றன. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப் படை அனுப்பிவைத்தது'' என்றார். இத்தகவலை ஜியோ நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
ஆனால், இந்தச் சம்பவத்தை மறுத்துள்ள இந்திய விமானப் படை அதிகாரிகள், "போர் விமானங்கள் எதுவும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையவில்லை' என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

