தொடர்ந்து விபத்துகளில் சிக்கி வருவதால், சீன நிறுவனத்தின் தயாரிப்பான எம்ஏ60 ரக விமான சேவையை ரத்து செய்து மியான்மர் விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் ஸியான் விமான தயாரிப்பு நிறுவனத்தின் எம்ஏ60 ரக பயணிகள் விமானத்தை மியான்மர் ஏர்வேஸ் வாங்கியுள்ளது. இந்த விமானங்கள் தொடர்ந்து விபத்துகளை சந்தித்து வருகின்றன. கடந்த திங்கள்கிழமை 60 பயணிகளுடன் சென்ற எம்ஏ60 ரக விமானம் ஒன்று தெற்கு மியான்மரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டபோது, ஓடுதளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. நல்ல வேளையாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடந்த மே மாதம், ஷான் மாகாண விமான நிலையத்தில் மற்றொரு விமானம் இதே போன்று ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தபோது, பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து குறிப்பிட்ட தூரத்தையும் தாண்டிச் சென்று நின்றது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.
அதே போன்று இந்தோனேசியாவிலும் இந்த ரக விமானம் ஒன்று கடந்த திங்கள்கிழமை தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து எம்ஏ60 ரக விமானங்களை இயக்குவதை நிறுத்திவைக்க மியான்மர் விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டின் நாயிங் கூறியதாவது:÷""எம்ஏ60 ரக விமானங்களில் தொழில்நுட்பப் பிரச்னை இருக்கும் எனத் தெரிகிறது. அந்த விமானங்களை சோதனையிட்டு, உரிய மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

