சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தற்கொலைப்படை தாக்குதல்: 15 பேர் சாவு

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் காவல் நிலையம் அருகே நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

Updated On :12 ஜூன் 2013, 6:42 am

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் காவல் நிலையம் அருகே நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் - அஸாதின் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை டமாஸ்கஸின் மார்ஜே சதுக்கம் அருகே உள்ள காவல் நிலையத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர்.

இதில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டனிலிருந்து செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, ""ஒரு குண்டுவெடிப்பு காவல் நிலையத்துக்குள்ளும், வெளியே மற்றொரு குண்டுவெடிப்பும் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளது.