தேர்தல் பிரசாரத்தின்போது என்னை கொலை செய்ய சதி நடப்பதாக அரசு எனக்கு எச்சரிக்கை விடுத்தது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:÷""கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பேரணியொன்றில் என்னை கொல்லச் சதி நடைபெறுவதாக அரசு தரப்பு என்னை எச்சரித்தது'' என்றார். எனினும், அந்தச் சதியின் பின்னணியில் யார் இருந்தனர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
முன்னதாக கட்சியின் பேரணியொன்றில் மேடைக்குச் செல்லும் வழியில் தவறி விழுந்த இம்ரான் கான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது லாகூரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவர் முழுமையாக குணமடையவில்லை. அதனால் எம்.பி.யாக அவர் இன்னமும் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம்:÷இம்ரான் மேலும் கூறுகையில், ""நாடாளுமன்றத் தேர்தலின்போது நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிருப்தி அளித்தன. தேர்தலில் முறைகேடு தொடர்பான எனது கட்சியினரின் புகாரை விசாரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் ஆகஸ்ட் மாதம் போராட்டம் நடத்துவோம்'' என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

