சீன விண்வெளி வீரர்கள் 5-வது முறையாக விண்வெளிப் பயணத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.
சீனாவின் கான்சு மாகாணம் ஜியுகான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை ஷென்ஸý-10 விண்வெளி ஓடத்துடன் இணைக்கப்பட்ட லாங் மார்ச் - 2எஃப் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்வெளி ஓடத்தில் 3 சீன வீரர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். விண்வெளி வீரர் நியி ஹெய்ஷெங் தலைமையிலான இக்குழுவில் ஜாங் யிஸாகுவாங், வாங் யாபிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் வாங் யாபிங் விண்வெளியில் இரண்டாவது முறையாக பயணம் மேற்கொள்ளும் சீனப் பெண் ஆவார். முன்னதாக கடந்த ஆண்டு சீனாவின் முதல் பெண்ணாக லியு யாங் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார்.
15 நாள்கள்:÷நியி ஹெய்ஷெங் உள்ளிட்ட 3 வீரர்களும் இதுவரை இல்லாத வகையில் 15 நாள்கள் விண்வெளியில் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
சீனா தற்போது விண்வெளியில் சோதனை அடிப்படையில் டியான்காங்-1 என்ற ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இப்போது செலுத்தப்பட்டுள்ள ஷென்ஸý விண்வெளி ஓடம், இந்த ஆய்வு மையத்துடன் இணைக்கப்படும். பின்னர், ஆய்வு மையத்தில் தங்கி 15 நாள்கள் ஆய்வு செய்ய விண்வெளி வீரர்கள் திட்டமிட்டுள்ளனர். விண்வெளியில் பெரிய அளவிலான ஆய்வு மையத்தை அமைக்கும் பணியை 2020-க்குள் நிறைவு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.
விண்வெளியில் ஆய்வு மையம் அமைப்பது தொடர்பான திட்டத்தின் தலைவர் ஜாங் யுஸியா கூறுகையில், ""மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள வீரர்கள், விண்வெளியில் தங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை அங்கிருந்தபடியே சீனாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
அதிபர் வாழ்த்து: முன்னதாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு அதிபர் ஜீ ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ""நீங்கள் சீன மக்களை பெருமையடைய செய்துள்ளீர்கள்.
விண்வெளி துறையில் சாதனை புரிய வேண்டும் என்ற நாட்டின் கனவையும் உங்களுடன் சுமந்து செல்கிறீர்கள். உங்களின் பயணத்தை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக திரும்பி வர வாழ்த்துகள்'' என்றார்.
ரஷியா, அமெரிக்காவை தொடர்ந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. இப்போது, விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவும் முயற்சியிலும் அந்நாடு ஈடுபட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

