இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான "பி.டி.ஃப்ரீபோர்ட் இந்தோனேசியா' என்ற தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கம் இந்தோனேசியாவில் செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய இந்தச் சுரங்கத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து 38 சுரங்கத் தொழிலாளர்களுக்கு கடந்த வாரம் பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது திடீரென சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதில் 17 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 4 உடல்கள் மீட்கப்பட்டன.
இதையடுத்து சாவு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பங் உத்தரவின்பேரில் இரண்டு அமைச்சர்கள் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

