அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரில் திங்கள்கிழமை வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 233 பேர் காயமடைந்தனர்.
ஓக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்நகரமே சின்னாபின்னாமாகி விட்டது. ஏராளமான வீடுகள், பள்ளிகள் முற்றிலும் சேதமடைந்தன.
இச்சூறாவளியால் 20 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழந்தனர். 70 குழந்தைகள் உள்பட காயமடைந்த 233 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓக்லஹோமா நகரில் அவசர நிலையை பிறப்பித்து அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அங்கு மீட்புப் படைகளை அனுப்பி வைத்துள்ளார். நிலப்பகுதியில் 40 நிமிடங்கள் தங்கி வீசிய சூறாவளியால் 2 ஆரம்பப் பள்ளிகளில் இருந்த குழந்தைகள் உயிருடன் தூக்கி எறியப்பட்டனர்.
மீட்புப் படையினர் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடி வருகின்றனர். சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தங்கள் குழந்தைகளின் கதி என்ன ஆனது என தேடி வரும் பெற்றோரைப் பார்த்தால் இதயம் நொறுங்கி விட்டது என ஓக்லஹோமா ஆளுநர் மேரி பாலின்ஸ் தெரிவித்துள்ளார்.கடந்த 36 மணி நேரத்தில் சூறாவளியால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் வெறும் கற்குவியலாக மாறி விட்டன.
கடந்த 1999-ம் ஆண்டுக்கு ஏற்பட்ட சூறாவளியால் 36 பேர் இதே பகுதியில் உயிரிழந்தனர். அதன்பின்னர் தற்போது வீசிய பெரும் சூறாவளி இது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

