சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் வழக்கின் மறுவிசாரணை தொடக்கம்

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான வழக்கின் மறுவிசாரணை சனிக்கிழமை தொடங்கியது.

Updated On :12 மே 2013, 9:22 am

எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான வழக்கின் மறுவிசாரணை சனிக்கிழமை தொடங்கியது.

எகிப்து அதிபராக இருந்த முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து 2011இல் அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்கியது. இதில் 850 பேர் வரை உயிரிழந்தனர்.

பின்னர் எகிப்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முபாரக் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கிய வழக்கில் முபாரக் குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் கடந்த 2012ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்தும், இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரியும் முபாரக், கெய்ரோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதன்படி, மறுவிசாரணை கடந்த மாதமே தொடங்கியிருக்க வேண்டும். எனினும், இவ்வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி முஸ்தபா ஹசன் அப்துல்லா அதை கெய்ரோ மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்கு மாற்றினார்.

இதையடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முபாரக்கிற்கு எதிரான வழக்கின் மறுவிசாரணை, நீதிபதி மஹ்மூத் கமேல் எல்-ரஷீதி முன்னிலையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த விசாரணைக்காக, உடல்நலம் குன்றியுள்ள முபாரக் ஸ்டிரெட்சரில் படுத்தபடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முபாரக்கின் இரு மகன்களான கமாலா, ஆலா ஆகியோரும், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் எல்-அட்லி, ஆறு உதவியாளர்கள் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.