குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையைத் தொடர வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் அமைத்த குழு, அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரங்களைத் தொடர்ந்து, அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்தது.
இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று சில தரப்பினர் அந்நாட்டை வலியுறுத்திய போதிலும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் அமைத்துள்ள சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் என்ற குழு வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரத்தில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் மோடியைத் தொடர்புபடுத்துவதற்கு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் உள்ளன.
எனவே அவருக்கு விசா வழங்குவது பொருத்தமாக இருக்காது. அவருக்கு விசா வழங்குவதற்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிக்க வேண்டும்.
குஜராத் முதல்வர் மோடி, அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்பார் என்ற அச்சம் காரணமாக, நாங்கள் 2012 நவம்பர் மாதத்தில் அப்போது வெளியுறுவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டனுக்கு ஒரு கடிதத்தை எழுதினோம்.
இதேபோல், மதச் சுதந்திர மீறல் அடிப்படையில் வெளிநாட்டைச் சேர்ந்த எந்தெந்த நபர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது என்று வெளியுறவு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சகங்கள் பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

