விமானத் தாக்குதல் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்களை வேண்டும் என்றே கொன்று வருகிறது சிரிய அரசு என மனித உரிமை அமைப்பு புகார் கூறியுள்ளது.
லண்டனில் ஜி-8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சிரிய கிளர்ச்சியாளர்கள் சந்தித்து மேலும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை தரும்படி கோரியுள்ள நிலையில் இப்புகார் எழுந்துள்ளது. அதிபர் பஷார் அல் ஆசாத்தை பதவியில் இருந்து அகற்றுவதற்காக தங்களுக்கு மேலும் அதிக திறன் வாய்ந்த ஆயுதங்களை வழங்க வேண்டும் என கிளர்ச்சியாளர்கள் கோரியுள்ளனர்.
நியுயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேக்கரிகள், மருத்துவமனைகள் என பொதுமக்கள் நடமாடும் இடங்களை குறி வைத்து சிரிய ராணுவம் விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது.
விமானத் தாக்குதல் மூலம் வேண்டும் என்றே பொதுமக்களை கொல்வதை போர்க்குற்றமாக கருத வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. கடந்த 2012 ஜூலை முதல் இதுவரை பொதுமக்கள் 4300 பேர் விமானத் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

