சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரம்பத்தால் கைகளை துண்டித்துக் கொண்ட இளைஞர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கடையில் புதன்கிழமை இளைஞர் ஒருவர் திடீரென ரம்பத்தால் தனது கைகளை துண்டித்துக் கொண்டார்.

Updated On :12 ஏப்ரல் 2013, 6:12 am

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் கடையில் புதன்கிழமை இளைஞர் ஒருவர் திடீரென ரம்பத்தால் தனது கைகளை துண்டித்துக் கொண்டார்.

கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கண் எதிரிலேயே இச்சம்பவம் நடைபெற்றது. கடைக்குள் அமைதியாக நுழைந்த இளைஞர் திடீரென ரம்பத்தை எடுத்து தனது இரு கைகளையும் துண்டித்துக் கொண்டார்.

இரு கைகளில் எலும்புகள் தெரியும் வரை அவர் துண்டித்துக் கொண்டார். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கே இருந்த மருத்துவ ஊழியர் துண்டிக்கப்பட்ட கைகளின் பகுதிகளை பாதுகாப்பாக எடுத்து வைத்தார்.

பின்னர் அந்த இளைஞர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.