அமெரிக்காவைச் சேர்ந்த 15 சிறுவன் யெலி ரிமெர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார்.
அறிவுத் திறன், உடல் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் "டெüன் சின்ட்ரோம்' நோயினால் பாதிக்கப்பட்ட அச்சிறுவன், தனது குறைகளை வென்று உலகின் மிகஉயரிய சிகரத்தில் ஏறும் முயற்சியில் இறங்கினான். நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பத்திரிகைகள் அவரைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. தனது குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் யெலி ரிமர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இப்போது நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் உள்ள முகாமில் ரிமெரின் குழுவினர் முகாமிட்டுள்ளனர். இதுவரை 17,600 அடி உயரத்தை அவர் எட்டியுள்ளார். அவரது தந்தை ஜஸ்டின் ரிமெரும் உடன் உள்ளார். மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள யெலி ரிமெரின் இந்த சாதனை முயற்சி குறித்து அவர் கூறுகையில், "பிறப்பிலேயே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களால் இந்த சமூகத்தில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்ற பொதுவான கருத்தை பொய்யாக்கும் வகையில் எனது மகன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளான். மனவலிமை இருந்தால் எந்த இலக்கையும் எட்ட முடியும்' என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

